ரஞ்சனின் குரல் பதிவுகளால் ஐ.தே.கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை! வடிவேல் சுரேஷ்

Report Print Steephen Steephen in அரசியல்

ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் அந்த குரல் பதிவுகள் ரஞ்சன் ராமநாயக்கவின் தனிப்பட்ட விடயம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு நாவலப்பிட்டி கதிரேஷன் மண்டபத்தில் இன்று நடைபெற்ற கருத்தரங்கின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தலில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நாளாந்த சம்பளத்தை வழங்குவதாக தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச வாக்குறுதி வழங்கியதாகவும் அதனை ஜனாதிபதி வழங்குவார் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1500 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்குவதாக கூறினார். தற்போதைய ஜனாதிபதி 1000 ரூபாவை வழங்குவதாக கூறினார். இந்த பணமும் தற்போது நாட்டில் காணப்படும் வாழ்க்கை செலவுக்கு அமைய போதுமானதல்ல.

ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. அந்த குரல் பதிவுகள் ரஞ்சன் ராமநாயக்கவின் தனிப்பட்ட விடயம்.

பதுளை மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் எமது பிரதிநிதிகளே உள்ளனர். எனது அரசியல் பயணத்தை விரும்பாத மற்றும் தடையேற்படுத்தும் பதுளை பிரதேசத்தை சேர்ந்த சில அரசியல்வாதிகள் அண்மையில் பசறை பிரதேசத்தில் நடந்த பேருந்து விபத்தில் கொல்லப்பட்டவர்களின் இறுதி கிரியைகளை மேற்கொள்வது தொடர்பாக ஆராயச் சென்ற போது அங்கிருந்தவர்களை தூண்டி விட்டனர்.

இதனால் எனது அரசியல் பயணத்திற்கு எந்த தடையும் ஏற்படாது எனவும் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...