தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக அங்கீகரிக்க கோரும் உங்களை நான் பிரேரிக்கிறேன்! வீ.ஆனந்தசங்கரி

Report Print Yathu in அரசியல்

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக அங்கீகரிக்க கோரும் உங்களை துரோகத்தின் ஏக பிரதிநிதிகளாகவும், தியாகத்திற்கு முழுக்க முழுக்க மாறுபட்டவர்கள் என்பதையும் நான் பிரேரிக்கிறேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உங்களிற்கு எவ்வித உரிமையும் கிடையாது. அந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருந்தது நான். எனக்கு தெரியாது நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா எப்படி அந்த கதிரையில் வந்து குந்தினார் என்பதும் தெரியாது.

எப்படி இரா.சம்பந்தன் இந்த கட்சியின் தலைவராக செயற்படுகின்றார் என்பதும் யாருக்கும் தெரியாது. இவ்வாறு துரோகங்கள் மத்தியில் வந்தவர்கள் இவர்கள்.

இன்று பழைய குருடி கதவை திறடி என்பது போன்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவிக்கின்றார்.

தமிழ் மக்களிற்கும், தியாகங்களிற்கும் துரோகம் செய்துவிட்டு மீண்டும் ஆணை தாருங்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கூறுகின்றனர். நேற்றைய பத்திரிகையில் எம்.ஏ.சுமந்திரன் ஏக பிரதிநிதிகளாக தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆணையை தர வேண்டும் என தெரிவித்த செய்தியினை பார்க்க கிடைத்தது.

நீங்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஆணையை ஏன் தர வேண்டும்? எதற்காக தர வேண்டும்? உங்களை துரோகத்தின் ஏக பிரதிநிதிகளாகவும், தியாகத்திற்கு முழுக்க முழுக்க மாறுபட்டவர்கள் என்பதையும் நான் பிரேரிக்கிறேன்.

நீங்கள் தேர்தலில் பங்கு கொள்ளவோ, மக்களை பிரநிதித்துவப்படுத்தவோ எந்தவித தார்மீக கடமையும், உரிமையும் கிடையாது என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்துகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...