எதிர்க்கட்சித் தலைவரின் தனிப்பட்ட செயலாளர் நியமனம்

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தனிப்பட்ட செயலாளராக சட்டத்தரணி ரவி ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

மாதுளுவாவே சோபித தேரர் உருவாக்கிய நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் பிரதானிகளில் ஒருவரான ரவி ஜயவர்தன, மாதுளுவாவே சோபித தேரர் நினைவு நிதியத்தின் தலைவராவார்.

சட்டத்தரணியான அவர், ஐக்கிய தேசியக் கட்சியின் ஹொரணை தொகுதியின் அமைப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

ஊழல் விசாரணை என்ற பெயரில் அமைப்பை ஒன்றை ஆரம்பித்த ரவி ஜயவர்தன கடந்த ராஜபக்ச அரசாங்கத்தின் பாரதூரமான ஊழல், மோசடிகள் பலவற்றை வெளிக்கொண்டு வந்தார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் நடந்த ஹெஜின் உடன்படிக்கை உட்பட பெரிய நிதி மோசடிகள் சம்பந்தமாக ஸ்ரீரால் லக்திலக்க, ரவி ஜயவர்தன, ரோஹன கமகே உள்ளிட்டோர் அங்கம் வகிக்கும் ஊழல் விசாரணை அமைப்பே நாட்டுக்கு முதலில் வெளியிட்டது.

நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் ரவி ஜயவர்தன தேசிய ரூபவாஹினி தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

கொழும்பு சட்டக் கல்லூரியின் சட்ட பட்டதாரியான ரவி ஜயவர்தன, இங்கிலாந்தின் லேங்ஷயர் பல்கலைக்கழகத்தின் சர்வதேச தொடர்புகள் சம்பந்தமான துறையில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளார்.

Latest Offers