வெளிவரும் ரஞ்சன் ராமநாயக்கவின் மேலும் பல குரல்பதிவுகள்

Report Print Ajith Ajith in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தம்வசம் 127ஆயிரம் தொலைபேசி கலந்துரையாடல் குரல் பதிவுகளை கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் உயர்மட்ட முக்கியஸ்தர்கள், நீதித்துறையினர், நடிகைகள் உட்பட்டவர்கள் அடங்கியுள்ளனர்.

இதில் இப்போது வரை 100 குரல் பதிவுகள் வரை சமூக வலைத்தளங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இன்னும் பல குரல் பதிவுகள் பதிவிடப்படவுள்ளன.

இந்தநிலையில் அவர் உரையாடல்களை நடத்திய பலரின் முக்கிய விடயங்கள் வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பல குரல் பதிவுகள் வெளியாவதை தடுக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியினர் முனைப்புக்களை எடுத்துவருகின்றனர்.

எனினும், தாம் தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்தமை நியாயமான செயலா? அல்லது நியாயமற்ற செயலா? என்பது அவசியமில்லை. ஆனால் எல்லாம் பொதுமக்களுக்கு உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என்பதற்காகவே செய்யப்பட்டது என்று ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...