13ஆவது திருத்தச் சட்டத்தை திருத்த வேண்டும்: ஜனாதிபதி கோட்டாபய

Report Print Steephen Steephen in அரசியல்

13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை திருத்த வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் அவற்றின் அதிகாரிகளை சந்தித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

குறிப்பாக 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவதை மீளாய்வு செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள சிங்கள இணையத்தளம் ஒன்று, நாட்டின் இனப் பிரச்சினைக்கு தீர்வாகவே 13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

இதனை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இந்த திருத்தச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானவை அல்ல என வடக்கு, கிழக்கை சேர்ந்த சிறுபான்மை இன மக்கள் நீண்டகாலமாக குரல் கொடுத்து வருகின்றனர்.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அப்பால் செல்லவும் இல்லை அதில் உள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை கூட அரசாங்கம் இன்னும் மாகாண சபைகளுக்கு வழங்கவில்லை.

வடக்கு, கிழக்கில் மாத்திரமல்ல, நாட்டின் தென் பகுதியில் உள்ள மாகாணங்களின் முதலமைச்சர்கள் அரசியலமைப்பு மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானதாக இல்லை. மேலும் அதிகாரங்களை வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தனர்.

பொலிஸ் அதிகாரம் என்பது மிகப் பெரிய விடயம் அல்ல என்பது அமெரிக்காவில் வாழ்ந்த ஜனாதிபதிக்கு தெரியாமல் இருக்காது.

அமெரிக்காவில் அனைத்து மாகாணங்களுக்கு தனித்தனியாக பொலிஸ் துறைகள் உள்ளன. பொலிஸ் என்பது இராணுவம் அல்ல. அரசியல்வாதிகளே இலங்கையின் பொலிஸ் துறையை இராணுவமாக மாற்றியுள்ளனர்.

நல்லாட்சி அரசாங்கம் பாதுகாப்பு அமைச்சில் இருந்து பிரித்து சிவில் அமைச்சாக பொலிஸ் துறையை மாற்றியது. தற்போதைய ஜனாதிபதியே அதனை மீண்டும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்துள்ளார்.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை மாற்ற வேண்டும் எனக் கூறும் ஜனாதிபதி 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு என்ன செய்வார் என்பதை கூற முடியாதுள்ளது என சிங்கள இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

Latest Offers

loading...