மூன்று ராஜாங்க அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள்

Report Print Steephen Steephen in அரசியல்

மூன்று ராஜாங்க அமைச்சர்களுக்கான அதிகாரங்களை வழங்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அரச நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் ராஜாங்க அமைச்சர் மகிந்த சமரசிங்கவுக்கு ஓய்வூதிய திணைக்களம், அரச மொழிகள் திணைக்களம், அரச மொழிகள் ஆணைக்குழு, மொழிக்கல்வி மற்றும் பயிற்சி தொடர்பாக தேசிய நிறுவனம், மனித வளத்தை அபிவிருத்தி செய்யும் இலங்கை தேசிய சபை, அரச சேவை ஓய்வூதியம் பெறுவோரின் பொறுப்பு நிதியம் ஆகிய நிறுவனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அரச முகாமைத்துவம், கணக்காய்வு விவகார ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவுக்கு இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனம், தொலைக்கல்வி நிறுவனம், மிலாதொர நிறுவனம் என்பன ஒதுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் முதலீட்டு ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு திறைசேரி செயலாளரின் கீழ் இருக்கும் பயன்படுத்தப்படாத சொத்துக்கள் துறை மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Latest Offers

loading...