மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா செல்லும் மகிந்த

Report Print Steephen Steephen in அரசியல்

பிரதமர் மகிந்த ராஜபக்ச, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு அடுத்த மாதம் இந்தியாவுக்கு செல்ல உள்ளதாக பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதமரின் இந்திய விஜயமானது புதிய அரசாங்கத்தின் உயர்மட்டத்தின் மூன்றாவது விஜயமாகும்.

மகிந்த ராஜபக்ச எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பத்தில் இந்தியாவுக்கு விஜயம் செய்ய உள்ளதுடன் திகதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இந்தியா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்துடன் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டுள்ளதுடன் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் போன்ற தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய நிதியுதவிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது முதல் வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டதுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.

கடந்த வாரம் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்தியாவுக்கு விஜயம் செய்ததுடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் உட்பட தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழுத்தங்களை கொடுத்து வரும் நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இந்திய விஜயம் அமைந்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த போது, 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை முற்றாக அமுல்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...