மகிந்தவிடம் ரணில் விடுத்துள்ள கோரிக்கை

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனக்கு கொழும்பில் வீடொன்றை வழங்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமராக பதவி வகித்த போது தனது சொந்த வீட்டில் வசித்து வந்த ரணில் விக்ரமசிங்க ஏன் தற்போது வீடு கேட்கிறார் என்ற கேள்வி பிரதமருக்கு எழுந்துள்ளது.

சட்டத்திற்கு அமைய சாதாரணமாக முன்னாள் ஜனாதிபதிகளுக்கு கொழும்பில் உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்படுகிறது.

எனினும், முன்னாள் பிரதமர்களுக்கு கொழும்பில் வீடுகளை வழங்கும் சம்பிரதாயம் இதுவரை இருக்கவில்லை.

இதனால், ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற முடியாது என்பதால், பிரதமர் மகிந்த ராஜபக்ச அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முன்னாள் பிரதமருக்கு கொழும்பில் உத்தியோகபூர்வ இல்லம் ஒன்றை வழங்கும் விசேட அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்ய உள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Offers

loading...