ரஞ்சனுடன் தொலைபேசியில் உரையாடிய நீதிபதிகள் தொடர்பாக முறைப்பாடு

Report Print Steephen Steephen in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மூன்று நீதிபதிகள் சம்பந்தமாக சில முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக நீதி சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆணைக்குழு கூடி கலந்துரையாடியதாக ஆணைக்குழு கூறியுள்ளது. நடைமுறைகளுக்கு அமைய நீதிபதிகள் சம்பந்தமாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

நீதி சேவைகள் ஆணைக்குழுவின் தலைவராக பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய கடமையாற்றி வருவதுடன் மேலும் இரண்டு ஆணையாளர்கள் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர்.