நாட்டின் எதிர்காலத் தலைவர் சஜித் பிரேமதாசவே!

Report Print Kamel Kamel in அரசியல்

இந்த நாட்டின் எதிர்காலத் தலைவர் சஜித் பிரேமதாசவே என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

காலியில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்காலத்தில் இந்த நாட்டின் தலைவராகவும் கட்சியின் தலைவராகவும் பொறுப்பு ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரே நபர் சஜித் பிரேமதாசவேயாகும்.

இந்த அரசாங்கம் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாக உறுதிமொழி வழங்கி ஆட்சியை கைப்பற்றியது, எனினும் அவ்வாறு மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவில்லை.

பொருட்களின் விலைகளை குறைத்து, மக்களை பாதுகாக்கின்றேன் எனக் கூறிக் கொண்டு பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்துவதில் பயனில்லை. மக்களின் அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

எனினும் இந்த அரசாங்கம் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்களை தவணை முறையில் வெளியிட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பி வருகின்றது.

ரஞ்சன் ராமநாயக்க பிழை செய்திருந்தால் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக நடவடிக்கைகள் எடுக்கப்பட முடியும், அதை விடுத்து அந்த தொலைபேசி உரையாடல்களை ஊடகங்களுக்கு வழங்கி சேறு பூசுவதிலும் மக்களை திசை திருப்புவதிலும் அர்த்தமில்லை.

அரசாங்கம் வெட்கம் கெட்ட செயற்பாடுகளையே செய்து வருகின்றது. நாட்டில் உள்ள பிரச்சினைகளை மூடி மறைக்கும் நோக்கில் இந்த தொலைபேசி உரையாடல்களை அரசாங்கம் வெளியிட்டு வருகின்றது எனவும் விஜயபால ஹெட்டியாரச்சி குற்றம் சுமத்தியுள்ளார்.

Latest Offers

loading...