போர்க்குற்றங்களுக்கு கோட்டாபயவே பொறுப்பு - ஊழல்வாதிகளைக் காத்தவர் ரணிலே! பொன்சேகா

Report Print Rakesh in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு அப்போது பாதுகாப்பு அமைச்சின் செயலராக இருந்தவரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்சவே முழுப் பொறுப்புக்கூற வேண்டும்.

அத்துடன், மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் ஊழல், மோசடி செய்தவர்களையும், நல்லாட்சியில் ஊழல், மோசடி செய்தவர்களையும் நல்லாட்சியில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவே காப்பாற்றினார் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

"நாட்டு மக்களின் ஜனநாயக மரபுக்கமைய ஆட்சிப்பீடம் ஏறியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானங்கள் தொடர்பில் பதிலளிக்க வேண்டும்.

அத்துடன், மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேசம் ஏற்கும் சுயாதீன விசாரணையை நடத்தியே ஆகவேண்டும்.

இதேவேளை, ஊழல், மோசடியாளர்களுக்கு அடைக்கலம் கொடுத்த முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி தோல்வியடைந்தமைக்கான முழுப்பொறுப் யும் ஏற்க வேண்டும்.

ஊழல், மோசடி விவகாரத்தால்தான் நல்லாட்சி கவிழ்ந்தது. குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனை வழங்கியிருந்தால் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருப்பார். அதேவேளை, நல்லாட்சியும் தொடர்ந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...