சீனாவின் வெளியுறவு அமைச்சரும் அமெரிக்க உதவி வெளியுறவு செயலாளரும் இலங்கைக்கு வருகை

Report Print Manju in அரசியல்

இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் செய்வதற்காக சீன வெளியுறவு அமைச்சர் (Wang yi ) வாங் யி நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

16 பிரதிநிதிகள் அடங்கிய குழு, சீனாவுக்குச் சொந்தமான சிறப்பு விமானத்தில் நேற்றிரவு 11.05 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளது.

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இலங்கையில் உள்ள சீன தூதரகத்தின் அதிகாரிஉட்பட உயர் அதிகாரிகள் விமான நிலையத்திற்கு சென்று இந்த குழுவினரை வரவேற்றனர்.

இதற்கிடையில், தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலர் ஆலிஸ் வெல்ஸ் இன்று காலை இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்திற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தார்.