வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் ராஜித

Report Print Ajith Ajith in அரசியல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று இரவு லங்கா தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை முடிவடைந்து வெளியேறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நடத்தப்பட்ட வெள்ளைவேன் கடத்தல் தொடர்பான செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் ராஜித ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் பிணையில் விடுவிக்கபட்ட அவர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் நேற்று இரவு அவர் சிகிச்சை முடிவடைந்து வீடு திரும்பியுள்ளார்.

இதேவேளை நேற்று இது தொடர்பிலான வழக்கு விசாரணை இடம்பெற்றபோது ராஜிதவையும் செய்தியாளர் சந்திப்புடன் தொடர்புடையவர்களையும் ஜனவரி 27ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.