சாட்சியம் வழங்க தயாரான சம்பிக்கவின் சாரதி

Report Print Ajith Ajith in அரசியல்

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் முன்னாள் வாகன சாரதி இரகசிய சாட்சியம் ஒன்றை வழங்க அனுமதி கோரியுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதிவானிடம் இந்தக் கோரிக்கை நேற்று விடுக்கப்பட்டது. பாட்டலி சம்பிக்க ரணவக்க தொடர்புடைய வாகன விபத்து வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த முன்னாள் சாரதி திலும் துசித்த கடந்த டிசம்பர் 24ஆம் திகதி நீதிமன்றில் சரணடைந்தார்.

இந்தநிலையில் பிணையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று தமது கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

குறித்த வாகன விபத்தின்போது பாட்டலி சம்பிக்க ரணவக்கவே வாகனத்தை செலுத்தினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளபோதும் அவரின் சாரதியே அந்தவேளையில் வாகனத்தை செலுத்தினார் என்று பாட்டலியின் தரப்பில் வாதிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...