ரஞ்சனின் மற்றுமொரு குரல் பதிவு வெளியாகியுள்ளதாக தகவல்

Report Print Ajith Ajith in அரசியல்

ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி கலந்துரையாடல் குரல் பதிவுகளில் மற்றும் ஒரு முக்கிய குரல் பதிவு நேற்று வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் கண்டி நீதிவான் நீதிமன்ற சட்ட உரைபெயர்ப்பாளருக்கும் இடையிலான உரையாடலே இவ்வாறு வெளியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை சிஹல என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.

அத்துடன் இவை தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அந்த அமைப்பு நீதி சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளது.