கட்சியின் எதிர்காலம் தொடர்பில் முரண்பட்ட கருத்துகளை முன்வைக்கும் ஐ.தே.க உறுப்பினர்கள்

Report Print Banu in அரசியல்
55Shares

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை நெருக்கடியின் பின்னணியில் உள்ளபோது சஜித் பிரேமதாச மற்றொரு அரசியல் கட்சியை உருவாக்க கூடாது என பேராசிரியர் ஆசு மாரசிங்க வலியுறுத்தியுள்ளார்.

கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கூறுகையில்,

சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராக முன்வந்துள்ளார். எனினும் ரணில் விக்ரமசிங்கவே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக தொடர்ந்தும் செயற்படுவார்.

அதேவேளையில் கரு ஜயசூரிய வரவிருக்கும் பொதுத் தேர்தலுக்கான பணிகளை முன்னெடுத்துச் செல்வார்.

இந்த முன்மொழிவுகள் தொடர்பிலான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இந்த சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமித்தால் அது கட்சிக்கு நல்லது என கூறியிருந்தார்.

இந்த கருத்துக்கள் மூலம், கட்சியின் எதிர்காலம் குறித்து ஐ.தே.க உறுப்பினர்களுக்கிடையில் முரண்பாடு காணப்படுகின்றமை வெளிப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.