அசாத் சாலியை கைது செய்யுமாறு சிங்கள ஜாதிக அமைப்பு கோரிக்கை

Report Print Banu in அரசியல்

புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தில் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சிங்கள ஜாதிக அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்றைய தினம் புகார் ஒன்றினை அளித்த பின் அந்த அமைப்பின் தலைவர் டான் பிரியசாத் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

மேலும் கூறுகையில்,

மாவனெல்ல புத்தர் சிலைகளை உடைத்தமை தொடர்பான விசாரணைகளில் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தலையீடு செய்ததன் காரணமாக அவரை கைது செய்ய வேண்டும்.

அசாத் சாலியை தவிர ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா போன்ற பலர் இந்த குற்றச்சாட்டுடன் தொடர்புப்பட்டுள்ளனர்.

அவர்கள் மீதும் இவை தொடர்பிலான பல குற்றச்சாட்டுகள் உள்ளன. இருப்பினும் அவர்கள் இன்னும் சட்டத்தின் முன்பாக கொண்டு வரப்படவில்லை.

மக்கள் ஜனாதிபதியை நம்புவதாலும், சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஜனாதிபதியால் சரியான முடிவுகள் எடுக்கப்படும் என நம்புவதாலுமே இந்த அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.