இலங்கையில் முதலீடு மேற்கொள்ள ஜப்பான் இணக்கம்

Report Print Malar in அரசியல்

இலங்கையில் பல்வேறு துறைகளிலும் முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஜப்பான் இணக்கம் வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், பிராந்திய மறுமலர்ச்சி பற்றிய ஜப்பானிய இராஜாங்க அமைச்சர் கொசோ யமமோடோவுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போதே இந்த இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவுகளைப் பலப்படுத்தி, அதனை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜப்பானிய இராஜாங்க அமைச்சர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கையின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளதுடன், பொருளாதாரமும் முன்னேற்றமடைந்து வருகின்றது.

ஜப்பானிய வர்த்தகர்களுக்கு இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான சிறந்த பின்னணி உருவாகியுள்ளது எனவும் ஜப்பானிய இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.