கமல் குணரத்ன தொடர்பில் பொன்சேகா அம்பலப்படுத்தப்போகும் விடயம்

Report Print Jeslin Jeslin in அரசியல்
584Shares

பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தொடர்பில் பல விடயங்களை அம்பலப்படுத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்று இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது.

கமல் குணரத்ன தொடர்பான தகவல்களை நாடாளுமன்றத்தில் வெளியிட சரத் பொன்சேகா தாயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த நாடாளுமன்ற அமர்வின் போது அது தொடர்பாக தெரிவிக்க எதிர்பார்த்திருந்த போதும் அதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இருப்பினும், அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குறித்த உரை நிகழ்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்த காலத்தில் இருந்து கமல் குணரத்ன தொடர்பாக உரையாற்ற நிறைய விடயங்கள் இருப்பதாகவும் அவற்றை தற்போது மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் பொன்சேகா தனக்கு நெருக்கமானவர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.