கரைச்சி பிரதேச சபையின் அனுமதி இன்றி 96 இலட்சத்திற்கு மேல் நிதி செலவு செய்யப்பட்டுள்ளது!

Report Print Sumi in அரசியல்

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபையில் கடந்த ஆண்டு மாத்திரம் 96 இலட்சத்திற்கு மேற்பட்ட நிதி சபையின் அனுமதியின்றி எவ்வித சட்டத்திட்டங்களுக்கும் உட்படாது செலவு செய்யப்பட்ட பின்னர் நிதி விடுவிப்புக்கு சபையின் அனுமதிக்கு கொண்டு வரப்படுகிறது என கரைச்சி பிரதேச சபையின் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் உறுப்பினர் மோகன்ராஜ் தெரிவித்துள்ளார்.

சபை நடவடிக்கைகள் தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

ஒரு திட்டத்திற்கு செலவு செய்யப்படுகின்ற போது நிதிக் குழுவில் அனுமதிக்கு விடப்பட்டு அங்கு அனுமதி பெற்று பின்னர் சபையின் அனுமதிக்கு விடப்படல் வேண்டும்.

ஆனால், கரைச்சி பிரதேச சபையில் அவ்வாறு எதுவும் இடம்பெறுவது கிடையாது.

தன்னிச்சையாக சபையின் நடைமுறைகளுக்கு புறம்பாக செலவு செய்து விட்டு இறுதியில் நிதிவிடுவிப்புக்கு சபையின் அனுமதி கோருகின்றனர்.

இதன்போது நாங்கள் 11 உறுப்பினர்கள் மற்றும் ஏனைய எதிர்தரப்பு உறுப்பினர்களும் எதிர்த்தாலும் பெரும்பான்மையுடன் அவர்கள் தீர்மானங்களை நிறைவேற்றிக்கொண்டு செல்கின்றார்கள்.

இவ்வாறு பல்வேறு முறைக்கேடுகள் கரைச்சி பிரதேச சபையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. எனவே இது தொடர்பில் நாம் கணக்காய்வு அலுவலகத்திற்கு தெரியப்படுத்தியிருகின்றோம்.

இதனையடுத்து வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் உயரதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு செல்லவுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...