சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு இடையில் சந்திப்பு!

Report Print Gokulan Gokulan in அரசியல்
225Shares

தமிழ்நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களை சந்தித்துள்ளார்.

சென்னையில் அண்மையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, ஈழத்தில் உள்ள தமிழர்களின் எதிர்கால நிலைமைகள் குறித்தும், தமிழ் நாட்டில் இருக்கும் ஈழத் தமிழர்களின் நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஈழத் தமிழர்களின் உரிமையை மீட்க இந்தியாவில் உள்ள அனைத்து பார் கவுன்சில்களின் ஆதரவினை திரட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக ஈழத் தமிழர் ஆதரவு வழக்கறிஞர்கள் சி.வி.விக்னேஸ்வரனிடம் தெரிவித்திருந்தனர்.

இந்த சந்திப்பில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவரும், தீவிர ஈழத்தமிழர் ஆதரவாளரும், மூத்த வழக்கறிஞருமான எஸ்.துரைசாமி தலைமையில், சென்னை உயர் நீதிமன்ற ஈழ ஆதரவு வழக்கறிஞர்கள் த.பார்வேந்தன் (மாநில செயலாளர் - விடுதலை சிறுத்தைகள் கட்சி), ரஜினிகாந்த் (தலைவர் - மக்கள் குடியரசு கட்சி), கிருஷ்ணகுமார் (செயலாளர் - சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம்), வி.இளங்கோவன் (தந்தை பெரியார் திராவிடர் கழகம்), துரை அருண் (திராவிடர் விடுதலை கழகம்), ஜிம்ராஜ் மில்டன், சுரேஷ் (நாம் தமிழர் கட்சி) பெண் மனித உரிமை போராளி வழக்கறிஞர்களான அஜிதா, தமயந்தி மற்றும் செங்கொடி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.