இரு பிரேணைகளை நிறைவேற்றியுள்ள காரைதீவு பிரதேச சபை

Report Print V.T.Sahadevarajah in அரசியல்

காரைதீவுப் பிரதேச சபையில் அண்மைக்காலமாக கலந்துரையாடப்பட்டு சர்ச்சைக்குரியதாக மாறியிருந்த இருபிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டம், காரைதீவு பிரதேச சபையின் 23ஆவது மாதாந்த அமர்வு நேற்று தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மாளிகைக்காட்டில் மாடறுக்கும் மடுவம் அமைத்தல் மற்றும் மாவடிப்பள்ளியில் மாட்டிறைச்சிக் கடை வழங்கும் செயற்பாடு தொடர்பிலான சர்ச்சைக்குரிய இரு பிரேரணைகள் உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டிருந்தன.

மாவடிப்பள்ளியில் காரைதீவு பிரதேச செயலகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பல் நோக்கு கூட்டுறவு சங்க வளவில் இறைச்சிக் கடையமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாவடிப்பள்ளி உறுப்பினர் எம்.ஜலீல் அதற்கான பிரேரணை மீது காரசாரமாக உரைநிகழ்த்தினார்.

இறுதியில் தவிசாளர் அதனை வாக்கெடுப்பிற்கு விட்டபோது 6 வாக்குகள் ஆதரவாகவும், 5 வாக்குகள் எதிராகவும், 1 வாக்கு நடுநிலையாகவும் அளிக்கப்பட்டது.

இப்பிரேரணை 1வாக்கினால் நிறைவேற்றப்பட்டது. அதாவது இறைச்சிக் கடையை பல் நோக்கு கூட்டுறவு சங்க வளகத்தில் தற்காலிகமாக அமைப்பது மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தால் தனியார் காணியில் வழங்குவது என்ற பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

பின்னர் உறுப்பினர் எ.ஆர்.எம்.பஸ்மீர் கொண்டுவந்த மாளிகைக்காட்டில் எம்.ஜ.அகமட்லெவ்வை என்பவருக்கு மடுவம் அமைப்பதற்கு அனுமதி அளித்தல் என்ற பிரேரணை சபையில் விடப்பட்டது.

இதற்கு உறுப்பினர் சி.ஜெயராணி வழிமொழிந்தார். அதற்கு உபதவிசாளர் எம்.ஜ.எம்.ஜாகீர் மற்றும் உறுப்பினர் எம்.எச்.எம்.இஸ்மாயில் ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்து உரையாற்றினர்.

இப்பிரேரணையும் வாக்கெடுப்பிற்குவிடப்பட்டது. 8 வாக்குகள் ஆதரவாகவும், 3 வாக்குகள் எதிராகவும், 1 வாக்கு நடுநிலையாகவும் அளிக்கப்பட்டது.

Latest Offers

loading...