ரஞ்சன் ராமநாயக்க சற்று முன்னர் கைது

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் அவரது இல்லத்தில் வைத்து ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்யுமாறு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு சட்டமா அதிபர் இன்று மதியம் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

நீதிபதிகளின் செயற்பாடுகளில் தலையிடுவதன்மூலம் நீதித்துறையை கேள்விக்குட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவரை கைது செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதன்படி இன்று மாலை அவரது இல்லத்தை சுற்றிவளைத்த பொலிஸார் சற்று முன்னர் அவரை கைது செய்துள்ளனர்.