சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் பாடுவதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சில கருத்துக்களில் உள்ள அரசியல்வாதிகள் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் பாடுவது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியிட்ட போதிலும் அது அரசாங்கத்தின் தீர்மானமாக கருத முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் ஊடக பிரதானிகளுடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் நிகழ்வுகளின் போது தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு தடை விதிக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
ஒரு நாட்டில் ஒரு தேசிய கீதம் மாத்திரமே பாட வேண்டும் என கூறிய பிரதமர், பல மொழிகள் பேசப்படும் இந்தியாவிலேயே தேசிய கீதம் ஒரு மொழியில் தான் பாடப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிரச்சினை தொடர்பில் பேசுவதில் இனங்களுக்கு இடையில் பேதம் அதிகரிக்கும் என கூறிய பிரதமர் தேசிய கீதம் தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தான் பத்திரிகைகளிலேயே பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.