அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள தீயினால் முழு உலகத்திற்கும் ஆபத்து - நாசா எச்சரிக்கை

Report Print Vethu Vethu in அரசியல்

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயின் புகை வளிமண்டலத்தின் மேல் அடுக்கு சுற்று போல இருக்கும் என நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.

டிசம்பர் மாதம் பிற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, பூமியின் பாதி ஏற்கனவே காட்டுத்தீ புகையால் மூடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இது பூமியின் காற்றின் தரத்தையும் பாதிக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பல மாதங்களாக, இந்த தீ விபத்துக்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளதுடன் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் அழிவடைந்தன.

இந்த தீ அனர்த்தம் காரணமாக சுமார் ஒரு பில்லியன் விலங்கினங்கள் அழிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers