காலி - பத்தேகம நீதிமன்ற நீதிவான் பதவியில் இருந்து இடை நிறுத்தம்!

Report Print Ajith Ajith in அரசியல்

காலி பத்தேகம நீதிமன்ற நீதிவான் தம்மிக்க ஹேமபால பதவியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார்.

நீதிச்சேவைகள் ஆணைக்குழு அவரை இடைநிறுத்தியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் சர்ச்சைக்குரிய தொலைபேசி கலந்துரையாடலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டே அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை ரஞ்சனுடன் தொலைபேசி கலந்துரையாடலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய தொடர்பிலும் நீதிச்சேவைகள் ஆணைக்குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு பரிந்துரையை அனுப்பியுள்ளது.