ஜேவிபியின் ஸ்தாபக தலைவரின் ஆட்கொணர்வு வழக்கு தொடர்பிலான விசேட மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிப்பு!

Report Print Ajith Ajith in அரசியல்

ஜேவிபியின் ஸ்தாபக தலைவர் ரோஹன விஜேவீர தொடர்பான ஆட்கொணர்வு வழக்கு தொடர்பில் அவரது மனைவி தாக்கல் செய்த விசேட மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கடந்த 30 வருடங்களாக நீதிமன்ற செயலாக்கத்தை மேற்கொள்ளவில்லை என்ற அடிப்படையில் 2019 பெப்ரவரி 11ம் திகதி இந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.

எனினும் நிராகரிப்பை எதிர்த்தே ரோஹன விஜேவீரவின் மனைவி மனுவை உயர்நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த மனுவை உயர்நீதிமன்ற நீதியரசர்களான சிசிர டி ஆப்ரூ, எஸ்.துரைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.