பொதுத் தேர்தலில் கோட்டாபயவிற்கு ஆதரவு வழங்க மைத்திரி தீர்மானம்!

Report Print Ajith Ajith in அரசியல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் அவருக்கு ஆதரவளிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானம் எடுத்துள்ளது.

இன்று மாலை கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியக்குழு இதற்கான முடிவை எடுத்துள்ளது.

ஏற்கனவே பொதுத்தேர்தலில் கோட்டாபய அங்கம் வகிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையில் தொகுதிப்பங்கீடு தொடர்பில் பிரச்சனைகள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு வந்தது.

எனினும் இன்று மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கோட்டாபயவின் அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொடுக்கப்போவதாக அறிவித்துள்ளது.