ரஞ்சனின் குரல் பதிவுகள்! சிக்கலில் அரசு தரப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் பதிவுகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் குறுகிய அரசியல் வேலைத்திட்டம் தற்போது அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வரும் தரப்பினர் பக்கம் திரும்பும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அந்த பதவிக்கு கொண்டு வருவதற்காக முக்கிய பங்களிப்பை செய்த செல்வந்த வர்த்தகரும் ஊடக வலையமைப்பு ஒன்றின் உரிமையாளருமான திலித் ஜயவீர சம்பந்தமாக ரஞ்சன் ராமநாயக்க வெளியிடும் கருத்துக்கள் அடங்கிய குரல் பதிவு ஒன்று பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த குரல் பதிவுக்கு அமைய திலித் ஜயவீரவின் வர்த்தக பங்காளியான வருணி அமுனுகம சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த குரல் பதிவை மற்றுமொரு செல்வந்த வர்த்தகர் பகிரங்கப்படுத்தியுள்ளதாகவும் இது அரசாங்கத்துக்கு நெருக்கமான வர்த்தகர்களிடம் ஏற்பட்டுள்ள மோதலின் பிரதிபலிப்பு என கூறப்படுகிறது.

அத்துடன் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பகிரங்கமானதை அடுத்து அவற்றில் பெயர் குறிப்பிடப்படும் தரப்பினரை அழைத்து விசாரணை நடத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதற்காக முன்கூட்டிய தயார் நிலையாக திலித் ஜயவீர சம்பந்தப்பட்ட குரல் பதிவு வெளியாகியுள்ளதை கருத முடியும் எனவும் இது அரசாங்கத்திற்குள் காணப்படும் மோதலாக கருத முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.