அவுஸ்திரேலியாவில் இலங்கையர்கள் ஐவர் கைது

Report Print Steephen Steephen in அரசியல்

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்கள், அந்நாட்டில் நபர்களின் பணப் பைகளை கொள்ளையிட்ட சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக மெல்பேர்ன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஐந்து பேர் கொண்ட குழுவாக இவர்கள் இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதுடன் அவர்கள் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில், தொடருந்துகள், ட்ராம் வாகனங்கள், பிரபலமான வர்த்தக நிலையங்களில் இவர்கள், பிற நபர்களின் பணப் பைகளை கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மெல்போர்ன் பொலிஸ் விசாரணைக்குழு மேற்கொண்ட தேடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் மூன்று பேர் பெண்கள் எனவும் இவர்கள் 25 முதல் 38 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மெல்போர்ன் மேல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.

Latest Offers