அரசாங்கம் பாசிசவாத பயணத்தை ஆரம்பித்துள்ளது - விக்ரமபாகு

Report Print Steephen Steephen in அரசியல்

புதிய அரசாங்கம் பாசிசவாத பயணத்தை ஆரம்பித்துள்ளதாக நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன குற்றம் சுமத்தியுள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், மக்களிடம் இருக்கும் அதிகாரங்களை பறிக்க அரசாங்கம் தயாராகி வருகிறது எனவும் கூறியுள்ளார்.

மக்களை அடக்கி, அரசாங்கத்திற்கு தேவையான வகையில் பாசிசவாத நிர்வாகத்தை முன்னெடுக்க முயற்சித்து வருகின்றனர்.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை அழித்து விட்டு, 18ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை மீண்டும் கொண்டு வர எதிர்பார்த்துள்ளனர்.

இதனை மேற்கொள்ள நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத காரணத்தினால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் வேலை செய்து வருகின்றனர்.

அனைத்து பக்கங்களில் சட்டத்தை கொண்டு அடக்க முயற்சித்து வருகின்றனர். மக்களின் அதிகாரங்களை பறித்து, முன்நோக்கி செல்லவே முயற்சித்து வருகின்றனர் எனவும் விக்ரமபாகு கருணாரட்ன குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...