பொதுத் தேர்தலில் பொலன்னறுவையில் போட்டியிடும் மைத்திரி

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன, பொலன்னறுவை மாவட்டத்தில் வேட்பாளராக போட்டியிட உள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

இம்முறை பொதுத் தேர்தலில் அனைத்து மாவட்டங்களிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். அவர்களுக்கான ஒழுக்க நெறி கோவை உருவாக்கப்பட்டு வருகிறது.

பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக படித்தவர்கள், அறிவு ஜீவிகள் என நூற்றுக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர்.

கட்சியின் சிரேஷ்ட ஆலோசகர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தலைமையிலான குழுவினர் தகுதியானவர்களை தெரிவு செய்யும் பணிகளை ஆரம்பித்துள்ளனர் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...