ரணில் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும்! கட்சிக்குள் வலுக்கும் எதிர்ப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க விலக வேண்டும் என்பது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்களின் விருப்பம் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவின் கூட்டம் சம்பந்தமாக இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க இறக்கும் வரை கட்சியின் தலைவராக இருக்க வேண்டும் என சிலர் நினைக்கின்றனர். ரணில் விக்ரமசிங்க விலகினால் ஐக்கிய தேசியக் கட்சி காணாமல் போய்விடும் என சிலர் நினைக்கின்றனர். எனினும் நாங்கள் அப்படி நினைக்கவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு தலைமைத்துவத்தை வழங்கக் கூடிய சிலர் கட்சியில் இருக்கின்றனர். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இந்த நிலைப்பாட்டில் இருப்பதால், கட்சியின் தலைவர் பதவி விலகி, புதிய தலைவர், புதிய தலைமைத்துவ அணி மற்றும் புதிய கொள்கையை முன்வைக்க சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் எனவும் அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்

Latest Offers

loading...