இராணுவ ஆட்சி ஏற்படும் என வடக்கு மக்கள் அச்சுறுத்தப்பட்டனர்: விமல் வீரவங்ச

Report Print Steephen Steephen in அரசியல்

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிக்கு வந்தால் மறுநாள் இராணுவ ஆட்சி ஏற்படும் என சில வடக்கு மக்கள் அச்சுறுத்தப்பட்டதாகவும் அது பொய்யாக மாறியுள்ளதுடன் வடக்கில் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் வேலையில்லாப் பிரச்சினையை தீர்க்கும் அரசாங்கம் ஒன்று ஆட்சிக்கு வந்துள்ளதாகவும் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் உள்ள இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனத்தில் மூடப்பட்டுள்ள ஓடு மற்றும் செங்கல் தொழிற்சாலையை இன்று பார்வையிட்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

1990ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டிருக்கும் ஒட்டுச்சுட்டான் மக்களுக்கு பல சேவைகளை செய்த இந்த நிறுவனம் மூன்று மாதங்களுக்குள் மீண்டும் திறந்து வைக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

இதன்மூலம் பிரதேசத்தில் உள்ள மக்களின் பிள்ளைகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கி ஏனைய மக்களின் தேவைகளை நிறைவேற்ற எதிர்பார்த்துள்ளேன்.

எங்களுக்கு உதவுங்கள் நாங்கள் உங்களது வாழ்க்கை நிலைமையை மேம்படுத்துவோம் என பிரதேச மக்களுக்கு கூறிக்கொள்கிறேன்.

உங்களுக்கு தேவையான முன்னேற்றத்தை ஏற்படுத்திக்கொடுப்போம் எனவும் அமைச்சர் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...