கரு ஜயசூரியவிடம் ரணில் விக்ரமசிங்க முன்வைக்கவுள்ள முக்கிய கோரிக்கை!

Report Print Ajith Ajith in அரசியல்

ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியத்தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு கரு ஜயசூரியவிடம் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் வார இறுதியில் ரணில் விக்ரமசிங்க, கரு ஜயசூரியவை சந்தித்து இந்தக்கோரிக்கையை விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் பொதுத்தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்கும் முகமாக இந்த பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கோரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சிக்கு சிங்கள பௌத்தர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக கரு ஜயசூரியவுக்கு தேசிய தலைவர் பதவி வழங்கப்படவேண்டும் என்று பௌத்த பிக்குகள் ஏற்கனவே ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியிருந்தனர்.

இதேவேளை கட்சியின் நாடாளுமன்ற குழுவினால் கட்சியின் தலைவரை நீக்க முடியாது. மாறாக கட்சியின் செயற்குழுவே இதற்கான அதிகாரத்தைக் கொண்டிருப்பதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தின் போது சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கும் வகையில் கொண்டு வரப்பட்ட யோசனை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...