எவென்ட் காட் ஆயுதக்களஞ்சிய வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஐந்து பேர் விடுதலை!

Report Print Ajith Ajith in அரசியல்

மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வினால் எவென்ட் காட் ஆயுதக்களஞ்சிய வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தம்மீது சுமத்தப்பட்டிருந்த 7573 குற்றங்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சட்டமா அதிபர் இவர்களுக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

மேஜர் ஜெனரல் பாலித பெர்ணான்டோ, மேஜர் ஜெனரல் கருணாரத்ன எகொடொவெல, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் சுஜாதா தமயந்தி உட்பட்ட ஐந்து பேரே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை எவென்ட் காட் நிறுவன தலைவர் நிசங்க சேனாதிபதி கொழும்பு விசேட நீதிமன்றத்தால் 250,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம் அவரின் கடவுச்சீட்டை நீதிமன்றம் தமது பொறுப்பில் வைத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers