ரஞ்சனின் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடலை மேற்கொண்ட நீதிபதிகளின் குரல்கள் பரீட்சிக்கப்படவுள்ளன!

Report Print Ajith Ajith in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடலை மேற்கொண்டதாக கூறப்படும் நடப்பு மற்றும் முன்னாள் நீதிபதிகள் மூவரின் தொலைபேசி குரல்களை பெற்றுக்கொள்ள உத்தேசித்துள்ளதாக பிரதி மன்றாடியார் நாயகம் திலீபா பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நுகேகொட நீதிமன்றத்தில் அவர் இந்த தகவலை இன்று வெளியிட்டுள்ளார்.

இதன்படி கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய, முன்னாள் நீதிபதி பத்மினி ரணவக்க மற்றும் பத்தேகம நீதிவான் தம்மிக்க ஹேமபால ஆகியோரின் குரல்களே பரீட்சிக்கப்படவுள்ளன.

இதேவேளை ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய குரல் பதிவு இறுவட்டுக்கள் பொலிஸாரின் பொறுப்பில் இருந்தபோது ஊடகங்களுக்கு எவ்வாறு சென்றன என்பது குறித்து விசாரணை நடத்துமாறு சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

Latest Offers