இராணுவத்திலிருந்து கிரமமாக விலகிச் செல்லாத படையினருக்கு பொதுமன்னிப்பு!

Report Print Kamel Kamel in அரசியல்

இராணுவத்திலிருந்து கிரமமாக விலகிச் செல்லாத படை வீரர்களுக்கு பொது மன்னிப்பு காலமொன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு காரணிகளுக்காக சட்டவிரோதமான முறையில் சேவையை விட்டு விலகிச் சென்ற முப்படைகளினதும் படை வீரர்களுக்கு இந்த பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.

கிரமமான முறையில் சேவையை விட்டு விலகிச் செல்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரைக்கு அமைய இந்த பொதுமன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 2020ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ம் திகதி முதல் ஏழு நாட்களுக்கு இந்த பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் திகதிக்கு முன்னதாக சேவையை கைவிட்டுச் சென்ற படையினருக்கு மட்டுமே இந்த பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொது மன்னிப்புக் காலத்தில் சேவையை விட்டு கிரமமான முறையில் விலகிச் செல்லவோ அல்லது மீண்டும் இணைந்து கொள்ளவோ சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது.

Latest Offers