அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவை கைது செய்ய பிடிவிராந்து உத்தரவு

Report Print Kamel Kamel in அரசியல்

அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவை கைது செய்ய பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே இந்த உத்தரவினை நேற்றைய தினம் பிறப்பித்துள்ளார்.

தனது சகோதரியான துசாரா விக்ரமநாயக்கவை திட்டி அச்சுறுத்தியதாக விதுர விக்ரமநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணை கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற போது நீதிமன்றில் விதுர விக்ரமநாயக்க முன்னிலையாகத் தவறியதனால் இந்த பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.