அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை செலுத்த முடியாத நிலை! அடுத்த நகர்வை வெளிப்படுத்தும் எம்.பி

Report Print Kamel Kamel in அரசியல்

தற்போதைய அரசாங்கம் பாரியளவிலான நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை செலுத்தவோ, அரச நிறுவனங்களின் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கோ முடியாத நிலைமை உருவாகியுள்ளது.

இதன் காரணமாக அரசாங்கம் சீனாவிடம் ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றது.

அரசாங்கம் அனைத்து அபிவிருத்தி பணிகளையும் இடைநிறுத்தியுள்ளது. நாம் கிராமங்களில் முன்னெடுத்த அபிவிருத்தித் திட்டங்கள் தற்பொழுது கைவிடப்பட்டுள்ளன.

அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை செலுத்த முடியாத காரணத்தினால் சீனாவிடம் ஆயிரம் மில்லியன் டொலர் கடன் பெற்றுக் கொள்ள முயற்சிக்கப்படுகின்றது.

மக்களை கடனாளியாக மாற்றக்கூடாது, எரிபொருள் விலையை உயர்த்த வேண்டாம். இன்னும் இரு மாதங்களில் சின்ன வெங்காயத்தை கொள்ளையிட வேண்டிய நிலைமை ஏற்படும்.

அறுபத்து ஒன்பது லட்சம் மக்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் இவையா என கேள்வியெழுப்பியுள்ளார்.