சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

Report Print Banu in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வரை கட்சியின் ஒழுக்காற்று குழுவில் முன்னிலையாகுமாறு கட்சி அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சியின் ஒழுக்காற்றுக்குழு, கட்சியின் சட்டத்தரணிகளுடன் இன்றைய தினம் ஒன்றுகூடி கட்சி குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இராஜங்க அமைச்சர்களான எஸ்.பி.திசநாயக்க, லக்ஸ்மன் யப்பா அபேவர்தன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித் விஜயமுனி சொய்சா, டிலான் பெரேரா ஆகியோரே இவ்வாறு ஒழுக்காற்று குழுவில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கட்சி விதிமுறைகளை மீறிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.