கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை! ரணில் எடுத்துள்ள திடீர் முடிவு

Report Print Vethu Vethu in அரசியல்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது ஜனநாயக தேசிய முன்னணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமை தாங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கான பொறுப்பை வழங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையை ஏற்கும் சாத்தியங்கள் இருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேபோல் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் 96 பேரின் பதவிக்காலம் முடிவடைவதால் புதிய நியமனங்களை வழங்கவும் ரணில் தீர்மானித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் அதனை மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கட்சித் தலைமைத்துவம் தொடர்பில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக புதிய கூட்டணி ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.