ஜனாதிபதி கோட்டாபயவின் வழக்கு ஆவணங்களுடன் லண்டன் சென்ற பெண்

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் இராணுவ பிரதானி சம்பந்தமான வழக்குகள் தொடர்பான இரகசிய ஆவணங்கள் எனக் கூறப்படும் ஒரு தொகை ஆவணங்களுடன் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் தொடர்புள்ள பெண்ணொருவர் பிரித்தானியாவுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த பெண் லண்டனில் உள்ள சானட் ஹவுஸ் என்ற மத்திய நிலையத்திற்கு சென்று இரகசிய ஆவணங்கள் தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார்.

சுவிசற்லாந்தில் தஞ்சமடைந்துள்ள குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவுடன் இந்த பெண் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்ததாகவும் லண்டனில் தர்ஷா ஜெகதீஸ்வரன் என்ற பெண்ணின் வீட்டில் தங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த இரகசிய ஆவணங்களில் உள்ள விடயங்களை வெளியிடுமாறு சானட் ஹவுஸ் நிறுவனம் விடுத்த கோரிக்கை அந்த பெண் நிராகரித்துள்ளார். முதலில் சுவிசற்லாந்து சென்று அங்கிருந்தே இந்த பெண் பிரித்தானியா சென்றுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று கூறியுள்ளது.

Latest Offers

loading...