அதிகாரம் உள்ள நாடாளுமன்றம் ஒன்றை நாம் அமைக்கின்ற போது அது கவனிக்கப்படும்! விமல் வீரவங்ச

Report Print Ashik in அரசியல்

அதிகாரம் உள்ள நாடாளுமன்றம் ஒன்றை நாம் அமைக்க மாட்டோம் என முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கூறுகின்றார், ஆனால் அதிகாரம் உள்ள நாடாளுமன்றம் ஒன்றை அமைக்கின்ற போது றிஷாட் பதியுதீன் அதனை பார்ப்பார் என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

மன்னார், மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்திற்கு இன்று காலை விஜயம் மேற்கொண்டதையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

வட மாகாணத்தில் உள்ள அரச நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளை கண்காணித்து அவற்றை அபிவிருத்தி செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதே எனது அமைச்சின் நோக்கம்.

அதன் அடிப்படையில், மன்னாரில் உள்ள மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்தின் உப்பு உற்பத்தியானது நாட்டின் சந்தைக்கும், பாவனையாளர்களுக்கான உப்பினை உற்பத்தி செய்கின்றது.

குறித்த உப்பு உற்பத்தி நிலையத்தை மென்மேலும் அபிவிருத்தி செய்வதன் மூலம் இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க முடியும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

நாட்டிற்கு தேவையான வளங்களை எமது நாட்டிலேயே உற்பத்தி செய்வதுடன் வெளிநாட்டிடம் எதிர்பார்க்காமல் இருப்பதே எமது நோக்கம்.

குறித்த விஜயம் ஒரு கண்காணிப்பு விஜயமாகவே அமைந்துள்ளது. நான் தொழிற்சாலைகள் அமைச்சரே தவிர வர்த்தக அமைச்சர் இல்லை.

தொழிற்சாலை உற்பத்திகள் குறித்து சிறந்த வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு இருந்தால் அவற்றை தொடர்ந்தும் நாம் முன்னெடுத்திருப்போம்.

தற்போதைய நாடாளுமன்றம் காலவதியாகி விட்டது. அதனால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. மார்ச் மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்படுகின்றது.

கலைக்கப்பட்ட பின் இடம்பெறுகின்ற தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம். அதன்போது பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

எனவே அதிகாரம் உள்ள நாடாளுமன்றம் ஒன்றை அமைப்பதே எமது நோக்கம். அதிகாரம் உள்ள நாடாளுமன்றம் ஒன்றை நாம் அமைக்கமாட்டோம் என முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கூறுகின்றார்.

ஆனால் அதிகாரம் உள்ள நாடாளுமன்றம் ஒன்றை அமைக்கின்ற போது றிஷாட் பதியுதீன் அதனை பார்த்துக்கொள்வார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers