மகிந்த அமரவீரவிடம் கொழும்பில் போட்டியிடுமாறு யோசனை முன்வைப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுமாறு அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அவர் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இந்த யோசனையை முன்வைத்துள்ளதாக தெரியவருகிறது.

கொழும்பு மாவட்டத்தில் வலுவான தலைமைத்துவம் இல்லை என்பதால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலர் இந்த யோசனையை கட்சியிடம் முன்வைத்துள்ளனர்.

எனினும் இந்த யோசனைக்கு மகிந்த அமரவீர இதுவரை பதிலளிக்கவில்லை என தெரியவருகிறது.

அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் என்பதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.