இந்திய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கைக்கு விஜயம்

Report Print Steephen Steephen in அரசியல்

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் ஒரு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வந்துள்ளார்.

இலங்கை வந்துள்ள இந்திய பாதுகாப்பு ஆலோசகர் இன்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரை சந்திக்க உள்ளார்.

இதன்போது பொருளாதாரம், தந்திரோபாய ஒத்துழைப்பு உட்பட சில விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்கு துறை முனையம் மற்றும் மத்தள விமான நிலையத்திற்கான முதலீடு உட்பட பிரதான திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட உள்ளது.

கடந்த வாரம் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்தியாவுக்கு விஜயம் செய்த பின்னர் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை வர தீர்மானிக்கப்பட்டிருந்தது.