ஐ.தே.கட்சி புதிய தோற்றத்துடன் தேர்தலை எதிர்கொள்ளும்: கயந்த

Report Print Steephen Steephen in அரசியல்

புதிய தோற்றத்துடன் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி தயாராக இருப்பதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

காலியில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

கட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சில இணக்கப்பாடுகளுக்கு வந்துள்ளதாகவும் சட்டரீதியாகவும் யாப்புக்கு அமையவும் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள கட்சி தயாராக இருப்பதாகவும் கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers