நாட்டில் பெரிய நிதி நெருக்கடி

Report Print Steephen Steephen in அரசியல்

நாடு தற்போது மிகப் பெரிய நிதி நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை கூட வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அரச நிறுவனங்கள் எரிபொருளுக்கான நிதியை தேடிக்கொள்ள முடியாத நிலைமைக்கு உள்ளாகியுள்ளன.

இந்த செலவுகளுக்காக அரசாங்கம் சீனாவிடம் ஒரு பில்லியன் டொலர்களை கடனாக பெற தயாராகி வருகிறது. எங்காவது பணத்தை பெற்று வேலைகளை செய்யுங்கள், ஆனால் மக்களை கடனாளிகளாக மாற்ற வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டாம். அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும் என கோருகிறோம். அதேவேளை இலங்கை தற்போது வெங்காயத்தை கொள்ளையிடும் நாடாக மாறியுள்ளது. 69 லட்சம் மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இதுவா? எனவும் ஹரின் பெர்னாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார்.