தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் அறிவிப்பு பொய்யானது: சமீர பெரேரா

Report Print Steephen Steephen in அரசியல்

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப் போவதாக அரசாங்கம் வெளியிட்ட அறிக்கை பொய்யானது என தேசிய மக்கள் சபையின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.

மார்ச் மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்பட உள்ளதாகவும், சம்பளத்தை அதிகரிக்கும் வாக்குறுதியின் அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹட்டனில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சமீர பெரேரா இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை மார்ச் முதலாம் திகதி முதல் அதிகரிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மார்ச் முதலாம் திகதி என்பதுதான் இங்கு முக்கியமானது. இது பொய்யானது.

ஏன் மார்ச் முதலாம் திகதி வரை இதனை ஒத்திவைக்க வேண்டும். நாட்டில் உள்ளவர்களும் தோட்டத் தொழிலாளர்களும் மார்ச் முதலாம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட போகின்றது என்பதை அறிவார்கள்.

மார்ச் முதலாம் திகதிக்கு எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது.

நாங்கள் சம்பளத்தை அதிகரிக்கின்றோம். எங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற வாக்களியுங்கள் என்று மக்களிடம் கூறுவார்கள் எனவும் சமீர பெரேரா குறிப்பிட்டுள்ளார்.