கோட்டாபய அரசாங்கத்தில் அரச சொத்துக்கள் விற்பனைக்கில்லை!

Report Print Abdulsalam Yaseem in அரசியல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் அரச சொத்துக்களை ஒருபோதும் விற்க மாட்டோம் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

திருகோணமலை துறைமுகத்துக்கு இன்றையதினம் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த ஆட்சியில் இலங்கைக்கு சொந்தமான அரச சொத்தக்களை விற்பனை செய்தது போன்று தமது ஆட்சியில் விற்பனை செய்யப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தனியார் துறை எவ்வாறு அதிகளவான வருமானத்தை ஈட்டுமோ அதேபோன்று வருமானத்தை அதிகரிப்பதற்கான வேலைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இதன்போது அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.